3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்

11/10/2017 தொழில்

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் மூன்று நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியினை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார்! தொடர்ந்து பேசுகையில் 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து - மீண்டும் அடுத்த ஆண்டு இம்மாநாட்டை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்  சிறந்த மனித ஆற்றல் திறன்மிகு பணியாளர்கள், எளிமையான தொழில் திட்டங்கள், வளர்ச்சியடைந்த தொழிற்பேட்டைகளில் இடவசதி, சிறந்த உள்கட்டமைப்பு, அருமையான துறைமுகங்கள் என பல வசதிகள் இருப்பதால் தமிழகம், தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்கள் தொழில் புரிய உதவும் வகையில் அண்மையில் பிசினஸ் ஃபெசிலிடேஷன் ஆக்ட் என்ற சட்டத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். தானியங்கி தொழில் துறையின் முக்கிய கருத்தாளர்களான நிக்கான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அகிரா முராமோட்டா , எங்கர்சால் ரேண்ட் இந்தியாவின் தேசிய விற்பனை பிரிவுத் தலைவர் நாகராஜ் சர்மா, ஓம்ரான் ஆட்டோமேஷன் இந்தியாவின் கிளை மேலாளர் அருந்தமிழன் இராஜாராம், சி.எல்.பி.ஏ. வின் தலைவர். சுனில் மேத்தா, மெஸ்ஸி ஃபிராங்க்ஃபர்ட் டிரேட் பேர்ஸ் இந்தியாவின் மேலாண் இயக்குநர். ராஜ் மேனக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.