விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது - லாரி உரிமையாளர்

08/30/2016

 

காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் இன்று லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேள னத் தலைவர் செல்ல. ராசாமணி கூறியது: விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதிக்காத வகையில் விரைந்து தண்ணீர் திறக்க நட வடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழ்நாடு மணல் லாரி உரிமையா ளர் சம்மேளனம் வலியுறுத்து கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 30-ம் தேதி (இன்று) அழைப்பு விடுத்துள்ள முழு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, 30-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் 1 லட்சம் மணல் லாரி கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதுபோல, மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறும்போது, ‘‘தமிழ் நாடு விவசாய சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, 30-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயக்காமல் நிறுத்தப் படும்’’ என்றார்.

வணிகர் சங்கம் ஆதரவு

காவிரி விவகாரத்தில் விவசாயி கள் நடத்தும் போராட்டத்துக்கு நாங்கள் முழு ஆதரவை கொடுப் போம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சேலத்தில் நேற்று தெரிவித்தார்.

அண்டை மாநிலங்கள் தமிழகத் துக்கு தண்ணீர் தர மறுக்கின்றன. இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் வாழ்வா தார பிரச்சினை. நாங்கள் கடை யடைப்பு மட்டும் நடத்தினால் போதாது. அன்றைய தினம் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடக்கூடாது. தொழிற்சாலைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை யும் இயங்கக்கூடாது. விவசாயி கள் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.