இந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறை

08/05/2017 தொழில்

 இறால் வளர்ப்பு பற்றிய தேசிய பட்டறைசென்னை சாந்தோம் மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ciba)   மையத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய உவர்நீர் வளர்ப்பு முறைகளிலிருந்து நவின இறால் வளர்ப்பு முறைகள் பலவிதத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. முன்புலி இறால் என்ற வகையும் தற்பொழுது வண்ணமை என்று அழைக்கப்படும் அமெரிக்க வெள்ளை இறால் இனமும் பெருமளவில் வளர்க்கப் படுகிறது (ciba) இறால் வளர்ப்பில் அதிக அளவில் ஆராய்ச்சி செய்துவருகிறது. இந்திய வெள்ளை இறால் வளர்ப்பு பற்றி கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பரிசோதனை முறையில் மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரபிரதேசம், தமிழ் நாடு, கேரளா, குஜராத், ஆகிய மாநிலங்களின் கடற்கரையோர பகுதிகளில் வெற்றிகரமாக வளர்த்து அறுவடை செய்துள்ளது. எனவே இந்த இந்திய வெள்ளை இறால் வளர்ப்பை நாட்டின் பல பகுதிகளிக்கும்  எடுத்து செல்ல பல்வேறு முறைகளை மேற்க கொண்டுவருகிறது. (MAKE IN INDIA) என்ற அடிப்படையின் முயற்ச்சிக்காக தேசிய பட்டரை ஒன்றை (ciba) தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் இறால் விவசாயிகள், மீன் விவசாயிகள், தொழில் முனைவோர், (ciba) விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக  தமிழக மீன் வளத்துறை இயக்குனர் வி.பி. தண்டபாணி அயல் நாட்டு மீன் இறால் வகைகளை நம்பி இருப்பதை விட நம் நாட்டு மீன் இறால் போன்றவற்றை வளர்த்து முன்னேற்றமடைய (ciba) எடுத்துள்ள முயற்ச்சிகள் பாரட்டுக்குரியவை என்றார். நம் இந்திய நாட்டின் மீன் இறால் போன்றவற்றை வளர்பதற்க்கான ஆராய்ச்சிகள் பற்றி (ciba) இயக்குனர் கே.கே.விஜயன்  கூறியதாவது இந்த தொழிற்நூட்ப்பத்தை மேற்கொண்டு புதிய வகை இறால் வளர்ப்பை  மேற்கொள்ள ஆவலாக வந்துள்ள மீன் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரையும் பாராட்டினார். இப்பட்டறையில் தமிழக மீன் வளத்துறை மோகன சுந்தரம், தமிழக மீன் வளத்துறை இணை இயக்குனர் சுரேஷ்ராயக் உட்பட ஏறாளமானோர் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொழில் மனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்துதிடப்பட்டது.