ஓட்டல் பில் மூலம் ஓவியாவுக்கு ஓட்டு வேட்டை

08/03/2017 சினிமா

தனியார், 'டிவி' நடத்தி வரும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை ஓவியாவின் ரசிகர் ஒருவர், தான் நடத்தும் ஓட்டலின் பில்லில் கூட, அவருக்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடர், பெரும் வரவேற்பை 
பெற்றுள்ளது. அதில், நடிகை ஓவியா, பலரது ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், 'ஓவியா ஆர்மி' என, தனி குழுவே செயல்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்போது, ஓட்டல் பில்லில், ஓவியாவுக்காக ஓட்டு சேகரிக்கப்படுகிறது.சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் உள்ள, ஸ்வீட் கடையில் வழங்கப்பட்ட ரசீது, சமூக வலைதளங்களில், பரவலாக உலவுகிறது. அதில், 'தேங்க்யூ; விசிட் அகெய்ன்; வோட் பார் ஓவியா - பிக் பாஸ்' என, குறிப்பிடப்பட்டு இருந்ததே, அதற்கு காரணம்.ஓட்டல் உரிமையாளர் ஜோதி பிரகாஷ், 50, கூறியதாவது:'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பார்த்தது முதல், ஓவியாவை பிடித்தது. அதன்பின் தான், அவர் சில படங்களில் நடித்து உள்ளதே எனக்கு தெரிய வந்தது. நான், 'சேவ் பார்மர், சேவ் வாட்டர்' போன்ற வாசகங்களை அச்சிட்ட போது யாரும் கண்டு கொள்ளவில்லை.இப்போது, வெளிநாடுகளில் இருந்தும் அழைத்து, வாழ்த்து கூறுகின்றனர்; இது, ஆச்சரியமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.