கிரசன்ட் பல்கலைக்கழகத்திற்க்கு நான்கு நட்சத்திர தரச் சான்று க்யூ எஸ் நிறுவனம்


கிரசன்ட் பல்கலைக்கழகத்திற்க்கு நான்கு நட்சத்திர தரச் சான்று க்யூ எஸ் நிறுவனம் வழங்கியது.
சென்னையை சேர்ந்த கிரசன்ட்  பல்கலைக்கழகத்திற்க்கு நான்கு நட்சத்திர தரச் சான்று பல்கலைக்கழகங்களின் தரத்தினை மதிப்பீடு செய்து தரச் சான்று வழங்கும் உலகின் முன்னனி நிறுவனமான க்யூ.எஸ்  வழங்கி பெருமை படுத்தியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைப் பெற்ற இந்நிகழ்ச்சியில் இதற்க்கான தரச் சான்றை க்யூ. எஸ்  நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்ரிக்கா, தெற்கு ஆசியா மண்டலத்திற்க்கான நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் அஸ்வின் ஃபெர்ணாண்டர் அவர்கள் கிரசன்ட்  பல்கலைக்கழகத்தின் மேலாண்மை குழுத் தலைவர் அப்துல் காதர் ஏ. ரஹ்மான் புகாரியிடம் வழங்கினார். 
இதில் சிறப்பு விருந்தினர் பல்கலைக்கழக நிதியுதவி குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் பங்கேற்று சிறப்பித்தார். மேலும் உலகின்  சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே க்யூ.எஸ் நிறுவனத்தின் நான்கு நட்சத்திர தகுதி பெற்றுள்ளன. இதற்கு முன்னாள் மைசூர் ஜெ.எஸ்.எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் நாடு வேலூர் வி.ஐ.டி கல்வி நிறுவனமும் பெற்றுள்ளன. இந்தியாவில் இத்தகுதியை பெறும் நான்காவது கல்வி நிறுவனம் என்ற பெருமையை கிரசன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.