அதிமுக பொது செயலர் யார் தேர்தல் ஆணையம் பதில்


 அதிமுக பொது செயலர், துணை பொது செயலர் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.சென்னையை சேர்ந்த சுவாமி கல்யாண சுந்தரம் என்பவர், தேர்தல் கமிஷனுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில விவரங்கள் கேட்டு மனு அனுப்பியிருந்தார்.அவர் தனது மனுவில்01. தேர்தல் கமிஷன் ஆவணங்கள்படி, அதிமுக பொதுச் செயலர் யார்?02. அதிமுக துணை பொதுச் செயலர் யார்?03. தற்போதைய பொதுச் செயலர் எப்போது பதவி ஏற்று கொண்டார்?04. துணை பொதுச் செயலர் எப்போது பதவியேற்றுக் கொண்டார்?05. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச் செயலர் மற்றும் துணை பொதுச் செயலர் பதவியேற்று கொண்டனர்? என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் கமிஷன், அதிமுகவில் தற்போது உட்கட்சி பிரச்னை நிலவுகிறது. பொதுச் செயலர், துணை பொதுச் செயலர் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இதில் திருப்தி இல்லாத பட்சத்தில் 30 நாளில் மேல்முறையீடு செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.