சிகிச்சைக்கு மறுப்பு: தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சிறுவன்


 

12 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால், தந்தையின் தோளிலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ஃபாசல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார். இவரது 12 வயது அன்ஷ். கடந்த ஞாயிறு இரவு அன்று சிறுவனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனின் தந்தை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுஷ்க்கு சிகிச்சை வழங்கியுள்ளார். ஆனால் காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே, உடனே சிறுவனை கான்பூரின் மிகப்பெரிய மருத்துவமனையான லாலா லஜ்பதிராய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்றதும் சுனில்குமார் தனது மகனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அனுமதிக்குமாறு, மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

ஆனால் அரை மணி நேரம் சோதனை செய்த மருத்துவர்கள், அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அன்ஷ்க்கு கடும் காய்ச்சல் இருந்ததால் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் வசதி செய்துதருமாறு சுனில் குமார் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து எவ்வித வசதியும் செய்து தரப்படாததால் வேறுவழியில்லாமல் சுனில் தனது மகனை தோளில் போட்டு சுமந்து சென்றுள்ளார்.

இதனிடையே அன்ஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தந்தையின் தோளிலேயே உயிரிழந்துள்ளார். இதனை குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சுனில் குமார் அழுதவாறு தனது மகனை மீண்டும் தோளில் சுமந்தபடியே வீட்டிற்கு சென்றுள்ளார். சுனில்குமாரின் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழியில் கூட யாரும் உதவ முன்வராதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளத