நிர்பயா வழக்கு: திகார் சிறையில் குற்றவாளி தற்கொலை முயற்சி; கவலைக்கிடம்


தில்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி வினய் ஷர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற வினய் ஷர்மாவை மீட்ட காவல்துறையினர், தீன தயால் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடும் பேருந்தில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற ராம் சிங், கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில், ராம் சிங் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. எனினும், அவரை காவல்துறையினர் கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.