பொறுமைக்கும் எல்லை உண்டு; இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை


டோக்லாம் எல்லை பிரச்னையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொறுமையாக உள்ளோம். இதற்கும் ஒரு எல்லை உண்டு என சீன ராணுவம் கூறியுள்ளது.இது குறித்து சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: டோக்லாம் பிரச்னையில் சீனா பல நல்லெண்ண நடவடிக்கைகள் எடுத்தது. தூதரக ரீதியில் அணுகி பிரச்னை தீர்க்க சீனா முயற்சி செய்தது. இருப்பினும், சீனாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்திய ராணுவம் உடனடியாக டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்.இந்த பிரச்னையில் தாமதப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும். சீனாவை எந்த நாடும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தனது பாதுகாப்பு இணையாண்மையை பாதுகாக்கும் திறன் சீன ராணுவத்திற்கு உண்டு. அமைதி மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கையை சீன ராணுவம் எந்த தயக்கமும் இன்றி எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.