சந்திரபாபு நாயுடுவை சுட்டுக்கொல்ல வேண்டும்; ஜெகன் மோகன்


வாக்காளர்களை ஏமாற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சுட்டுக்கொல்ல வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக ஓய்.எஸ்.ஆர். காங். கட்சி உள்ளது. இதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இம்மாநிலத்தில் நந்தியால் தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கர்னூல் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓய்.எஸ்.ஆர்.காங். தலைவர் ஜெகமன் மோகன் ரெட்டி பேசியது, நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார். எனவே அவரை பொது இடத்தில் வைத்து சுட்டுக்கொல்ல வேண்டும் அவ்வாறு செய்வதால் தவறு ஒன்றுமில்லை. வரும் இடைத்தேர்தலில் நீங்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.ஜெகன்மோகனின் பேச்சுக்கு தெலுங்கு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தான் ஒரு அரசியல்வாதி என்பதை மறந்து பேசியதாக ஜெகன் மோகன் மீது கர்னூல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளது.