குஜராத்தில் ராகுல் கார் மீது கல்வீச்சு


ஆமதாபாத்: குஜராத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது தனீரா பகுதியில், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
தொடர்ந்து பன்ஸ்கந்தா பகுதியில் ராகுல் வந்த போது , அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கார் பலத்த சேதமடைந்தது. ராகுலுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், கல்வீச்சுக்கு பா.ஜ.,தான் காரணம். அக்கட்சி குண்டர்கள் கல்வீசினர். இது குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும். இந்த அராஜக செயலை ஏற்க முடியாது. கல்வீச்சில், ராகுல் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளது.