ஆக.,14 முதல் தினகரன் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்


 

 ஆகஸ்ட் 14 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் டிடிவி தினகரன்.ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக அதிமுக அம்மா அணியின் தினகரன் தெரிவித்திருந்தார். எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப்பயணம் அமையும் என அவர் தெரிவித்திருந்தார். சுற்றுப்பயண விபரத்தை அறிக்கையாக வெளியிட்டிருந்தார்.சுற்றுப்பயணம் விபரம்: முதல் சுற்றுப்பயணமாக மதுரை மாவட்டம் மேலுாரிலிருந்து தொடங்குகிறார் தினகரன்.ஆக.,-23 வடக்கு மாவட்டம், வடசென்னை. ஆக.,29ல் தேனி மாவட்டம். தேனி. செப்.,5ல் கரூர் மாவட்டம். கரூர். செப்., 12ல் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், தஞ்சாவூர்.செப்.,23ல் திருநெல்வேலி நகர்ப்புறம், புறநகர். திருநெல்வேலி. செப்.,26ல் தருமபுரி மாவட்டம். தருமபுரி. செப்., 30ல் திருச்சி நகர்ப்புறம், புறநகர், திருச்சி. அக்.,5ல் சிவகங்கை மாவட்டம், சிவகங்கை.