துணை ஜனாதிபதி தேர்தல் : ஆதரவு கேட்டு எம்.பி.,க்களுக்கு வெங்கைய்யா கடிதம்


ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஓட்டுபோடுபவர்களான எம்.பி.க்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு கடிதம் எழுதி உள்ளார். அதில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், 'நான் பாராளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் பெற்றவன். எம்.பி.க்களின் தனி உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை எனக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் புதிய, நவீன இந்தியாவை படைக்க டில்லி ராஜ்யசபா மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. எனவே, என்னை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால், அரசியல் சாசன தத்துவங்களை கடைபிடிப்பதுடன், அப்பதவியின் கண்ணியத்தை கட்டிக்காப்பேன்' என்று கூறியுள்ளார்.