அமைச்சர் ஜெயக்குமார் நிதானம் இழந்து பேசுகிறார்: கடும் விமர்சனம்


சென்னை: முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட போது அமைச்சர் ஜெயக்குமார் நிதானத்தில் இல்லையா என தினகரன் அணி எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் டி.டி.வி. தினகரனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி  உட்பட 122 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் சசிகலா மற்றும் தினகரன் தலைமை ஏற்பதாக கூறினார். இதை புரிந்து கொள்ளாமல் ஜெயக்குமார் பேசுவதை தங்கதமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்தார். தினகரனை விமர்சித்தால் ஜெயக்குமார் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு எம்.எல்.ஏ.வும் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.