பசுமை நிறமாக மாற்றும் ரீகிரீன் சென்னை

07/08/2017 வீடியோ

சென்னை அடையார் தனியார் விடுதியில் எர்த்ஸ்மையில் அரக்கட்டளை சார்பில் சென்னை முழுவதிலும் பசுமை நிறமாக மாற்றும் ரீகிரீன் சென்னை என்ற அமைப்பு துவக்க விழா ஜெகத் காஸ்பர் ராஜ் தலைமையில் நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வார்தா புயலால் பாதிக்கப்பட மரங்களை ஈடு செய்யும் விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதி மீண்டும் பசுமை நிறமாக மாற்றும் முயச்சியில் ரோட்டரி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டு முயற்சியில் வரும் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் மரங்களை உறுவாக்க பள்ளிகள் மற்றும் கிராமங்களில் கருத்தரங்கங்கள் அமைத்து விழிப்புனர்வு ஏற்படுத்தி பசுமை நகரம் மற்றும் பசுமை புறநகரமாக மற்ற திட்டமிட்டுள்ளது. இம்முயற்சியில் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை பசுமை நிறமாக மாற்ற வேண்டும் மென்றனர்.