கிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா

10/08/2017 கல்வி

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பல்கலைகழகத்தின் 7வது  பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மலேசிய அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா சிறப்பு விருந்திருனராக பங்கேற்று சிறப்புறையாற்றி வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டச் சான்றிதள்களை வழங்கினார். இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு தலைவர் அப்துல் காதிர் ஏ.ரஹ்மான் புஹாரி. முதன்மை தகுதி பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் இளநிலை மற்றும் நிறைநிலை படிப்புகளில் முன்னணி மதிப்பெண் பெற்றவர்களுக்கு தர சான்றிதழ்களையும் வழங்கினார்.