கிரிக்கெட்டின் பீல்டிங் பிதாமகன் ஜான்டி ரோட்ஸ் மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றித

08/09/2017 கல்வி

 

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாலய பள்ளியில் விளையாட்டுத்துறையில் சாதித்த மாணவர்களுக்குச், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட்டின் 'பீல்டிங் பிதாமகன்' என்று வர்ணிக்கப்படுபவருமான ஜான்டி ரோட்ஸ் வருகை தந்து மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினரார்.

கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டபோது,  நியமிக்கப்பட்ட போதுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக  ஜான்டியின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பித்தது. விளம்பரத் தூதராகவும் தமிழகத்தை ஒரு ரவுண்ட அடித்துக் கொண்டிருக் கிறார் ஜான்டி. படு உற்சாகமாக இருந்த ஜான்டியிடம், பள்ளி மாணவர்கள் சுட்டித்தனமான கேள்விகளை விடுத்தனர். தனக்கே உண்டான துடுக்கத்தனத்துடன் பதிலளித்தார் ஜான்டி.

எடுத்த எடுப்பில், 'இந்திய கிரிக்கெட் வீரர்களில் உங்களுக்குப் பிடித்த பீல்டர் யார்' என்ற கேள்விக்கு, 'முகமது கய்ப், யுவராஜ் சிங் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட்டில் பீல்டிங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்தியவர்கள். தற்போது இருக்கும் அணியில், நிறைய நல்ல பீல்டர்கள் இருக்கின்றனர். விராட் கோலி பீல்டிங் ஓ.கே. தான். ஆனால், சுரேஷ் ரெய்னாதான் இந்திய பீல்டர்களில் 'தி பெஸ்ட்'. அவர், சிறு வயது ஜான்டியை எனக்கு நினைவுபடுத்துகிறார்' என்று நெத்தியடியாகச் சொன்னவரிடம்,

'சச்சினின் சாதனைகளை கோலி உடைப்பாரா' என்று அடுத்த கேள்வி கேட்டனர் 'சச்சின், 16 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். ஆனால், கோலியால் அத்தனை ஆண்டுகள் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியே. எனவே, சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பது கடினம் என்றுதான் நினைக்கிறேன்' என்றார்.