தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா

07/22/2017 கல்வி

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வாளாகத்தில் உள்ள லியோ முத்து உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 4000 திற்க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். இதில் அனைத்து இந்திய தொழில் நுட்ப கல்வி கழகத்தின் தலைவர் அனில் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே பங்கேற்று குத்து விளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்து சிற்றப்புரையாற்றினார். தேர்வு எழுதிய 1388 மாணவர்களில் 1344 பேர் தேற்ச்சிபெற்றனர். கடந்த 18 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேற்ச்சி விதத்தில் வேறு எந்த கல்லூரியும் பெறாத 96.82% சதவிதம் தேற்ச்சி பெற்று ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். . ஸ்ரீசாய்ராம் கல்லூரி குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து சிறப்புரையாற்றி மாணவ மாணவியர்களுக்கு 75 லட்சம் மதிப்புள்ள தங்க மெடல்கள் வழங்கி கௌரவித்தார். ஐந்து தங்க மெடல்களும், 236 பலகலைக்கழக ரேங்க் பெற்று 2016 ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தர எண்ணிக்கை’க்கான பட்டியலில் தமிழகத்திலே சாய்ராம் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது