ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்


 

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சலை தடுக்க பேரூராட்சியின் ஊழியர்கள் குழுவினர் பேரூராட்சி முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில்  உள்ள 15 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவங்களில் டெங்கு காய்சல் பரவி வருவதை தொடர்ந்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை, மற்றும் பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்நது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில்  மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு வழங்கபட்டு வருகிறது. மேலும் கொசு உற்பத்தியை தடுக்க  பேரூராட்சி ஊழியர்கள் 10 பேர் அடங்கிய குழுவினர் மூலம் தெருக்களில் கொசு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கபட்டு வருகிறது.

மேலும் தினமும் கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. டயர், தேங்காய் ஓடு, உரல், பானை போன்றவைகளை அகற்ற வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கபட்டு வருகிறது.