நான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. கு: அமைச்சர் விஜயபாஸ்கர்


 சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை: விமர்சனங்களை தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிருபிக்கும். சுகாதார துறையின் நற்பணி மற்றும் வேகத்தை முடக்கலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். ஸ்டாலினின் திசைதிருப்பும் முயற்சி பலிக்காது. வயதில் மூத்தவரான அவர், நான் சொல்லி எதையும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை. குட்கா விவகாரத்தில் அரசியல் ரீதியாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.